மிரட்சியில் குடிகள்..

எங்கும் மக்கள் சாலையெலாம்

மக்கள்தான் பிறந்த நாடெலாம் அலைகின்றனர்

தான் குடியில்லையா?
தான் குடியில்லையா எனக் கூக்குரல்…

என் காதுகளில் விழுகிறது

தான் நடந்தசாலையெலாம் போராட்டங்கள்

தமிழ்பால் அன்பு கொண்டோர் எல்லாம் தமிழர்கள் அல்லவா?

இவர்கள் மீதுகுடிமறுப்பு எனும் கயமையை ஏவுவது மிடிமை மட்டுமல்ல மடிமையும் கூட

இதை மறுக்கும் ஒரு வீர ஆட்சியாளன் கூட இல்லையா இத் தமிழ்நாட்டில்?

தமிழர் குடியை ஏத்தும் ஆட்சியாளன் இல்லையா?

இன்று மாசி அம்மாவாசை “புறப்பொருள் வெண்பா மாலை” அய்யனாரின் கோவிலில் இருந்து… வள்ளுவனின் வரிகளில்,

சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்தாழாது உஞற்று பவர்க்கு.குறள் 1024

தமிழ்நாட்டில் அய்யனாரும், கருப்பசாமியும் இன்று இருந்தால் அவர்கள் தன் குடிகளை இவ்வாறு தவிக்க விடமாட்டார்கள் என்பது நிதர்சனம்.

என் நினைவுகளில் சல்லிக்கட்டு போராட்ட வாசகங்கள் வருகின்றன… தமிழர் எழுச்சி தொடரில் பதிந்து இருக்கிறேன்…

தமிழரின் எழுச்சி ௨0௧௭

17

கழிவுநீர் மேலாண்மை ..

இளையோர் கைகளில் இந்தப் பதாகை தாங்கி இருந்தனர். மத இன சாதி நல்லிணக்கம் தேவை என்கின்றனர்

தமிழரின் எழுச்சி ௨0௧௭

16

கால்வாய், குளங்கள், ஏரி தண்ணீர் மேலாண்மை ..

மதத்தின் அடிப்படையில் எந்த ஒரு சட்டமும் உருவாக்குவது நாட்டை பிளவுபடுத்துவதற்குச் சமமான செயலன்றி வேறென்ன?

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started
close-alt close collapse comment ellipsis expand gallery heart lock menu next pinned previous reply search share star